எதிரிகளை பெயர் சொல்லி
உயிருக்குக் குறி வைத்து
வேட்டையாடியாச்சு...
உள்ளேயே இருந்து
நோக்கத்தை அடையும்
வழியை விவாதித்த
கருப்பாடுகளை பலி
கொடுத்தாச்சு ...
எப்போதும் கேள்விகள்
கேட்கிற அதிமேதைகளை
ஒழிச்சாச்சு..
பின் மிச்சம் எதுவென
சுற்றிப் பார்த்தால்
கிழே,
இடிந்த வீடுகள்
எரிந்த வாகனங்கள்
கழுகுகளும் நரிகளும்
தின்றது போக
கிடக்கிற எலும்புகள்
மேலே,
வெறிச்சிட்ட வானம்
எரிக்கின்ற சூரியன்.
-ரம்யன்
(பழைய இதழில் இருந்து ...)
Friday, March 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
மேலும் சில ஆலோசனைகள்:
ReplyDelete1. வலையின் பெயரை தமிழிலேயே அழகாக பூபாளம் என மாற்றவும்
2. பழைய கவிதை/கட்டுரைகளை வெளியிடும் போது அது வந்த தேதியை (இருந்தால்) குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.