Sunday, March 22, 2009

வணக்கம் .

அன்புள்ள நண்பர்களுக்கு ,


பூபாளம்

வணக்கம். கிட்டத்தட்ட இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கையெழுத்து பத்தரிக்கை வெளி வருவதற்கு எவ்வளவு நேரம் செலவழித்தோம். . சைக்லோடைளின் கருவி மூலம் அதை தயார் செய்தோம். அதை எத்தனை பேர்களுக்கு கொடுக்க முடிந்தது . வேலை, கல்யாணம், குழந்தைகள் என்று அனைவரும் அவரவர் பாதைகளில் பிரிந்து போனோம்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களில் யோசித்து உடனே பூபாளம் செயல்படுத்த முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இன்று தொடங்கிவிட்டேன்.

அன்று கூட இருந்த நண்பர்கள் இப்போது எங்கெங்கேயோ பிசியாக இருந்தாலும் அவர்களும் கூடிய சீக்கிரம் இந்த தளத்தில் ஒன்று சேருவார்கள் என்று நம்பிக்கை. வெகு விரைவில் நமது படைப்புகளுடன் சந்திப்போம்.

உங்கள் அன்புள்ள

ஹெச் என் ஹரிஹரன்

No comments:

Post a Comment